CUB’s Export Oriented Credit and Allied Services to MSMEs
பேக்கிங் கிரெடிட் (INR / வெளிநாட்டு நாணயம்)
  • ஏற்றுமதியாளர்கள் வங்கியின் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏற்றுமதிக்கான பொருள்களை கொள்முதல் செய்வதற்கும் உற்பத்தி செய்வதற்கும் ஒரு குறைவான வட்டி விகிதத்தில் உறுதியான உத்தரவு / LC-இன் பேரில் இந்திய ரூபாய் அல்லது வெளிநாட்டு நாணயத்தில் பேக்கிங் கடன் வசதியைப் பெறலாம்

போஸ்ட் ஷிப்மென்ட் கடன் (INR / வெளிநாட்டு நாணயம்)
  • ஏற்றுமதியாளர்கள் வங்கியால் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு குறைவான வட்டி வீதம் மற்றும் பரிமாற்ற வீதத்தில் பில் தள்ளுபடி/பர்சேஸ்/நெகோஷியேஷன் வடிவத்தில் வெளிநாட்டு வாங்குபவர் பெயரில் வரையப்பட்ட பில்களுக்கு எதிராக இந்திய ரூபாய் அல்லது வெளிநாட்டு நாணயத்தில் போஸ்ட் ஷிப்மெண்ட் வசதியைப் பெறலாம்

பில் வசூலித்தல்
  • குறைவான எக்ஸ்சேஞ்ச் விகிதம் மற்றும் கட்டணங்களில் விரைவான ஏற்றுமதி வருமானத்தைப் பெற கலெக்ஷன் அடிப்படையின் ஏற்றுமதியாளர்கள் பில்களைச் சமர்ப்பிக்கலாம்
ஏற்றுமதி முன்பணம் பெறுதல்
  • ஏற்றுமதியாளர்கள் தங்கள் வெளிநாட்டு பொருளை வாங்குபவர்களிடமிருந்து முன்பணத்தை சிறந்த பரிவர்த்தனை விகிதத்தில் குறைந்த கட்டணத்தில் விரைவாக வயர் பரிமாற்ற ஊடகம் வாயிலாக பெறலாம்

வங்கி உத்தரவாதங்கள்
  • ஏற்றுமதியாளர்கள் வங்கி உத்தரவாதத்தினை வெளிநாட்டிலிருந்து வாங்குபவரின் பெயரில் முன்பணம் பெற அல்லது ஏற்றுமதி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக பெறலாம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 12-07-2022 11:27:17 PM

இப்போது விண்ணப்பியுங்கள்







gIEKP


CUB வங்கி சேவைகள்

ஒரு தனித்துவமான வங்கி
உங்கள் அனைத்து தேவைகளுக்கும்.
எங்கும்... எந்த நேரத்திலும்...