CUB வாலெட் மீது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
CUB வாலெட் என்றால் என்ன அதன் அம்சங்கள் என்ன?

CUB வாலெட் ஒரு செயலி அதனை CUB வாடிக்கையாளர்கள் மற்றும் CUB வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் பயன்படுத்த முடியும். CUB வாலெட் CUB அல்லது பிற வங்கிக் கணக்கில் இருந்து உங்கள் நெட்பேங்கிங் மூலம் அல்லது உங்கள் டெபிட் கார்டைப் பயன்படுத்தி பணத்தை CUB கணக்குகள், பிற வங்கி கணக்கு, CUB வாலெட் கணக்கு மற்றும் உங்கள் தொடர்புகளுக்கு அனுப்பலாம். உங்கள் ப்ரீபெய்டு மொபைலை நீங்கள் ரீசார்ஜ் செய்யலாம், போஸ்ட்பெய்ட் தொலைபேசி கட்டணம், DTH ரீசார்ஜ், உங்கள் கிரெடிட் கார்டு பில்கள் செலுத்துங்கள். க்யூ ஆர் குறியீட்டை பயன்படுத்தி ஸ்கேன் மற்றும் பணம் செலுத்தலாம்.

இந்த செயலியில் யார் பதிவு செய்யலாம்?

CUBயில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் கணக்கு இல்லாத வாடிக்கையாளர்களும் இந்த செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

CUB வாலெட் என்ற செயலிக்கு எவ்வாறு நான் பதிவு செய்து கொள்வது ?

கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து CUB வாலெட்டை பதிவிறக்கம் செய்யவும். பதிவிறக்கம் முடிந்ததும் செயலியை திறந்து உங்கள் தகவல்களை பதிவு செய்ய "பதிவு செய்க" என்பதை தேர்வு செய்யவும். உங்களுக்கு CUB-யில் கணக்கு இருந்தால் "CUB கணக்கு கொண்டவர்’ என்ற தேர்வை செய்து உங்கள் 15 இலக்க கணக்கு எண்ணை உள்ளிடவும். இல்லையென்றால் ‘CUB-யில் கணக்கு இல்லை’ என்பதை தேர்வு செய்து பதிவு செய்யும் செயல்முறையை தொடர்ந்து செய்யவும்.

பதிவு செய்யும் நடைமுறை:-
பதிவு செய்வதற்கு ஏதேனும் கட்டணம் உள்ளதா?

இல்லை, பதிவு செய்வதற்கும், செயலியை பயன்படுத்தவும் எந்த கட்டணமும் இல்லை.

CUB வாலெட்டில் பரிவர்த்தனை செய்ய ஏதேனும் அளவுகள் உள்ளனவா?

ஆம் CUB வாலெட்டில் பரிவர்த்தனை செய்ய அளவுகள் உள்ளன. சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் முழுமையாக KYC செய்தவர்களுக்கு தினமும் அளவு ருபாய் 1, 00,000/- இருக்கும் அதாவது வாலெட் கணக்கில் மொத்த செலுத்தப்படும் தொகையும் கணக்கில் உள்ள மொத்த பணமும் ரூபாய் 1, 00 000/-. தாண்டக்கூடாது. மற்ற வாடிக்கையாளர்களுக்கு அளவு ரூபாய் 10,000/- உள்ளது. அதாவது வாலெட் கணக்கில் செலுத்தப்படும் தொகையும் கணக்கில் உள்ள மொத்த பணமும் ரூபாய் 10,000/- ரூபாயை தாண்டக்கூடாது/-

CUB ஈ வாலெட்டில் பணம் செலுத்துவது எவ்வாறு ?

வாடிக்கையாளர் தனது CUB வங்கிக் கணக்கில் இருந்தும், மற்ற வங்கி கணக்குகளில் இருந்து வாலெட்டில் பணம் செலுத்த முடியும். CUB நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் பயன்படுத்தி தனது CUB கணக்கில் இருந்து பணம் மாற்றிக்கொள்ளலாம். மற்ற வங்கிகளின் கணக்கில் இருந்து பணம் செலுத்த அவர்களின் கடன் அட்டை அல்லது நெட் பேங்கிங் பயன் படுத்தலாம்.

CUB வாலெட் பயன்படுத்தி பணம் அனுப்புவது எப்படி ?
விருப்பங்கள் என்றால் என்ன ?

நீங்கள் அடிக்கடி நிகழ்த்தும் பரிவர்த்தனைகளை இந்த விருப்பங்கள் பட்டியலில் சேர்க்கலாம். எனவே எதிர்காலத்தில் மீண்டும் தகவல்களை உள்ளிட வேண்டியதில்லை. வாலெட் பின் மற்றும் (OTP) மட்டுமே பரிவர்த்தனையை தொடர போதுமானது.

என் வாலெட் அறிக்கையை எவ்வாறு காணலாம்?

உங்கள் வாலெட் அறிக்கையை முகப்பு பக்கத்தில், எனது கணக்குக்கு கீழ் உள்ள மெனுவிலிருந்து தேர்வு செய்து நீங்கள் காணலாம்.

வாலெட் PIN ஐ எப்படி மாற்றுவது ?

உங்கள் வாலெட் PIN-ஐ முகப்பு பக்கத்தில், எனது கணக்குக்கு கீழ் உள்ள மெனுவில் "PIN மாற்றுக" என்பது தேர்வு செய்து நீங்கள் மாற்றலாம்.

மொபைல் ரீசார்ஜ் மற்றும் போஸ்ட்பெய்டு கட்டணம் செலுத்தும் முறை எவ்வாறு?

நீங்கள் ப்ரீபெய்டு மொபைல் ரீசார்ஜ் மற்றும் போஸ்ட்பெய்டு கட்டணம் ஆகியவற்றை மொபைல் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து செய்யலாம் அதன் பிறகு மொபைல் ரீசார்ஜ் விருப்பத்திற்கு ப்ரீபெய்டு என்றும் மற்றும் போஸ்ட்பெஸ்டு பில்களை செலுத்துவதற்காக போஸ்ட்பெய்டு விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

வாலெட்டில் ஏதேனும் சிக்கல் நேர்ந்தால் என்ன செய்யவேண்டும் ?

நீங்கள் நமது 24/7 மணிநேர வாடிக்கையாளர் சேவை மையத்தை @ 044-71225000 அணுகலாம் அல்லது customercare@cityunionbank.in என்ற முகவரிக்கு உங்கள் வாலெட் பற்றிய தகவல், மற்றும் உங்கள் சிக்கல் ஆகியவற்றை மின்னஞ்சல் அனுப்பலாம்.

எனது வாலெட்டிற்கு கியூ ஆர் குறியீடு உருவாக்குவது எப்படி?

கட்டணம் செலுத்தும் தேர்வில் QR குறியீட்டு விருப்பத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் QR குறியீட்டை உருவாக்கலாம்.. QR குறியீட்டை உருவாக்கியவுடன் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு CUB ஈ-வாலெட் செயலி மூலம் அவர்களிடம் இருந்து பணம் பெறலாம்.

நான் CUB வாலெட்டில் உள்நுழைய தேவையான எனது 4 இலக்க PINஐ மறந்துவிட்டேன். எப்படி மாற்றி அமைப்பது?

வாலெட் PIN ஐ நீங்கள் மாற்றி அமைக்க “வாலெட் PIN மறந்துவிட்டேன்” என்ற தேர்வை பயன்படுத்தலாம். பின்னர் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு அதன் பின்னர் OTP-யை உள்ளிடவும். அதன் பின்னர் பாதுகாப்பு கேள்வியை தேர்வு செய்து பதிவு செய்த பொழுது அதற்கு நீங்கள் கொடுத்த பதிலையும் உள்ளிடவும். இப்போது பழைய PIN-ஐ மாற்றியமைக்க வாலெட் PIN-ஐ உள்ளிட்டு மீண்டும் உள்ளிடவும்.

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 03-09-2022 09:57:36 AM

CUB வங்கி சேவைகள்

ஒரு தனித்துவமான வங்கி
உங்கள் அனைத்து தேவைகளுக்கும்.
எங்கும்... எந்த நேரத்திலும்...