கேள்வி. 1.ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷின் என்றால் என்ன (ATM)?

பதில்1 ATM என்பது கணினிமயமாக்கப்பட்ட ஒரு இயந்திரம். இதன் மூலம் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுத்தல் மற்றும் பிற நிதி தொடர்புடைய, தொடர்பு இல்லாத செயல்பாடுகளை வங்கிக்கு செல்லாமல் செய்துகொள்ளும் வசதியை கொடுக்கும்.

கேள்வி.2 என்ன வகையான கார்டுகளை ATM-யில் பயன்படுத்த முடியும்?

பதில் 2 வங்கியில் வழங்கப்பட்ட டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் ப்ரீபெய்டு கார்டுகள் (பணம் எடுக்கும் அனுமதி உள்ளவை) ATM-ல் பல பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம்.

கேள்வி. 3 ATM-களில் எவ்வித சேவைகள்/வசதிகள் உள்ளன?

பதில் 3. பணம் வழங்குதல் மட்டும் அல்லாது, வங்கிக்கு சொந்தமான ஏ ATM-ல் மற்ற பல சேவைகள்/வசதிகள் இருக்கும்:

கேள்வி.4 ATM-யில் எவ்வாறு ஒருவர் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள இயலும் ?

பதில் 4 ATM-யில் பரிவர்த்தனை செய்வதற்கு, வாடிக்கையாளர் தன் அட்டையை ATM-யில் சொருக/தேய்க்க வேண்டும் மற்றும் வங்கியால் வழங்கப்பட்ட தன் தனிபட்ட அடையாள எண்ணை(PIN) உள்ளிட வேண்டும்.

கேள்வி.5 தனிப்பட்ட அடையாள எண் (PIN) என்றால் என்ன?

கேள்வி.6 இந்த கார்டுகளை நாட்டில் உள்ள எந்த ATM-யிலும் பயன்படுத்தலாமா? இதற்கு வாடிக்கையாளரிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுமா?

பதில் 6 ஆம். இந்தியாவில் உள்ள வங்கியால் வழங்கப்பட்ட கார்டுகளை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதே நேரம் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் ஒரு மாதத்தில் 5 முறை மற்ற வங்கிகளின் ATM-யில் நிதி சார்ந்த/ சாராத அனைத்து வகையான பரிவர்த்தனைகளை கட்டணம் இன்றி செய்ய இயலும். அதற்கு மேல் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

அடுத்து

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 01-09-2022 11:52:05 AM

CUB வங்கி சேவைகள்

ஒரு தனித்துவமான வங்கி
உங்கள் அனைத்து தேவைகளுக்கும்.
எங்கும்... எந்த நேரத்திலும்...