கேள்வி. 7. வாடிக்கையாளர் தன் PIN எண்ணை மறந்துவிட்டாலோ அல்லது தனது கார்டு ATM-யில் மாட்டிக்கொண்டாலோ அவர் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்?

பதில் 7. வாடிக்கையாளர் தனக்கு கார்டு வழங்கிய வங்கியை தொடர்பு கொண்டு ஒரு புதிய PIN எண்ணிற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது ஒரு புதிய கார்டை பெற விண்ணப்பிக்கலாம்.

பதில் 8 நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் மூலம் அல்லது எங்கள் CUB-வாடிக்கையாளர் சேவையை(24*7) தொடர்புகொள்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் ATM கார்டைத் முடக்க முடியும்

கேள்வி. 9 ஒரு நாளைக்கு குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச பணம் எடுத்தல் வரம்பு என்று ஏதேனும் இருக்கிறதா?

பதில் 9.ஆம். பணம் எடுத்தல் வரம்புகள் பெரும்பாலும் கார்டு வழங்கும் வங்கிகளால் அமைக்கப்படுகின்றன. இந்த வரம்பு சம்பந்தப்பட்ட ATM இருப்பிடங்களில் காண்பிக்கப்படும்.

கேள்வி.10 ஒரு வாடிக்கையாளர் பிற ATM-களில் பணம் எடுக்கும் போது ATM பரிவர்த்தனை தோல்வியடைந்து, இருப்பினும், வாடிக்கையாளர் கணக்கில் பணம் எடுக்கப்பட்டிருந்தால் அவர் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்?

பதில் 10 வாடிக்கையாளர் அட்டை வழங்கிய வங்கிக்கு உடனடியாக புகார் கொடுக்க வேண்டும். இந்த செயல்முறை மற்றொரு வங்கி ATM-களில் செய்யப்பட்ட பரிவர்த்தனைக்கும் பொருந்தும்

கேள்வி. 11 கேள்வி எண். 10 யில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு தோல்வியடைந்த ATM பரிவர்த்தனையின் மூலம் எடுக்கப்பட்ட பணத்தை வாடிக்கையாளர் கணக்கில் திருப்பிச் செலுத்த கார்டு வழங்கும் வங்கிகளுக்கென ஏதேனும் கால வரம்பு இருக்கிறதா?

பதில் 11 RBI அறிவுறுத்தல்களின் படி, புகார் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 7 வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளர் கணக்கில் பணத்தை திருப்பிச்-செலுத்துதல் மூலம் வாடிக்கையாளர்கள் புகார்களை நிவர்த்தி செய்ய வங்கிகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

கேள்வி. 12 7 வேலை நாட்கள் தாமதத்திற்குப் பிறகு இழப்பீட்டிற்கானத் தகுதியை வாடிக்கையாளர்கள் பெறுகிறார்களா?

பதில் 12 ஆம். ஜூலை 1, 2011 முதல், 7 வேலை நாட்களுக்கு அப்பால் உள்ள கால தாமதத்திற்கு நாளுக்கு ரூ. 100/- வீதம் தாமதப்பட்ட நாட்களுக்கான தொகையை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். வாடிக்கையாளரால் உருவாக்கப்பட்ட எந்த உரிமை கோரலும் இல்லாமல் இழப்பீடானது வாடிக்கையாளர் கணக்கிற்கு செலுத்தப்பட வேண்டும். பரிவர்த்தனை நடந்த 30 நாட்களுக்குள் புகார் செய்யவில்லை எனில், வாடிக்கையாளர் தன் புகார் நிவர்த்தியின் மீதான கால தாமதத்திற்குரிய இழப்பீட்டிற்கு உரிமை கோர முடியாது.

கேள்வி 13.குறிப்பிட்ட நாட்களுக்குள் தங்கள் புகாரின் மீதான நடவடிக்கையை தங்கள் வங்கி எடுக்காவிட்டால் வாடிக்கையாளர் என்ன செய்ய வேண்டும்?

பதில் 13. அத்தகைய சூழ்நிலைகளில் வாடிக்கையாளர் உள்ளூர் வங்கி குறைதீர்ப்பாளரிடம் உதவியை நாட முடியும்.

பின்செல்லவும்

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 01-09-2022 12:12:57 PM

CUB வங்கி சேவைகள்

ஒரு தனித்துவமான வங்கி
உங்கள் அனைத்து தேவைகளுக்கும்.
எங்கும்... எந்த நேரத்திலும்...